ETV Bharat / bharat

ஆம்புலன்ஸ் இல்லாததால் 8வயது சிறுவன் மடியில் 2வயது தம்பியின் சடலம்- மத்திய பிரதேசத்தில் சோக சம்பவம் - சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் இறந்த தம்பியின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் சாலையோரம் 8 வயது அண்ணன் தம்பி உடலை வைத்திருந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

Etv Bharatஆம்புலன்ஸ் இல்லாததால் 8வயது சிறுவன் மடியில் 2வயது தம்பியின் சடலம்- மத்திய பிரதேசத்தில் சோக சம்பவம்

author img

By

Published : Jul 11, 2022, 11:58 AM IST

போபால் (மத்திய பிரதேசம்): மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனையில் இறந்த இரண்டு வயது குழந்தையின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் அக்குழந்தையின் 8வயது அண்ணனின் மடியில் வைத்து ஒரு சாலையோரம் காத்திருந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

அருகிலிலுள்ள பத்ஃப்ரா கிராமத்தில் வசிக்கும் ஒருவர் அவரது 2 வயது ஆண் குழந்தைக்கு இரத்த சோகை நோய்க்கு சிகிச்சை பெற அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் அக்குழந்தை சிகிச்சை பலனின்ற உயிரிழந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார்.

அங்கு ஆம்புலன்ஸ் இல்லை எனக் கூறியதாகவும், ஆம்புலன்ஸ் டிரைவர் ரூ.1500 கேட்டதாகவும் கூறப்படுகிறது. அவரிடம் அவ்வளவு பணம் இல்லாததால் குறைந்த விலையில் வாடகைக்கு வாகனம் தேட சென்றார். இதற்கிடையில் அவரது இறந்த குழந்தையின் உடலை அவரது மற்றொரு 8 வயது ஆண் குழந்தையின் மடியில் வைத்து சாலையோரம் அமர வைத்து விட்டு சென்றார்.

அவரது தந்தையை எதிர் நோக்கி மடியில் தம்பியுடன் இருந்த அந்த சிறுவனின் நிலை காண்போர் மனதை கலங்கடித்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த கொத்வாலி காவல் நிலைய பொறுப்பாளர் யோகேந்திர சிங் ஜடுவான் அக்குழந்தையின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார்.

இவ்வாறு இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல கூட வசதி இல்லை என மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கமல் நாத் அவரது ட்விட்டரில் கடுமையாக சாடியிருந்தார். அவரது பதிவில், ‘மொரேனாவின் இதயத்தை உடைக்கும் படம்- 8 வயது அண்ணணின் மடியில் 2 வயது சகோதரனின் சடலம், ஆம்புலன்சுக்காக அலையும் தந்தை... முனிசிபல் கார்ப்பரேஷனில் வெற்றி வாகை சூடுவதில் மும்முரமாக முதல்வர்.

சிவராஜ் சார், வெட்கமற்றவருக்கு வரம்புகள் இல்லை, வரம்புகள் இல்லை? "சவ்ராஜ் ஜங்கிள் ராஜ்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகனின் சடலத்தை தோளில் சுமந்த தந்தை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.