ETV Bharat / bharat

திருமண விழாவில் சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு!

ஒடிசாவில் கேந்திரபாரா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் விருந்து சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி கட்டாக்கில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hospital
hospital
author img

By

Published : Feb 22, 2021, 10:15 AM IST

ஒடிசாவில் கேந்திரபாரா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் விருந்து சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்திரபாராவில் ஒரு திருமண நிகழ்வு நடைபெற்றது. இதில் மணமகன் குணால் மல்லிக் என்பவர் பட்டாமுண்டாய் என்ற மாத்தியா கிராமத்தைச் சேர்ந்தவர். மணமகள் நிம்பூரைச் சேர்ந்தவர். இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற பிறகு, அனைவரும் மணமகளின் வீட்டிற்குச் சென்று, உறவினர்கள் விருந்தில் கலந்துகொண்டு உணவருந்தினர்.

இந்நிலையில் மணமகன் குணாலுடன் சென்ற 70 பேர் நோய்வாய்ப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் பட்டமுண்டாய் துணைப் பிரிவு சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா
திருமண விழாவில் சாப்பிட்ட 70க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு

அதில், மூன்று பேர் கட்டாக்கின் எஸ்சிபி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர்.

இதையும் படிங்க: இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: தலை தப்புமா நாராயணசாமியின் அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.