ETV Bharat / bharat

30 குரங்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூரர்கள் - karnataka news

கர்நாடகாவில் 30க்கும் மேற்பட்ட குரங்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

karnataka
கர்நாடகா
author img

By

Published : Jul 29, 2021, 8:20 PM IST

பெங்களூரு: ஹாசன் மாவட்டம், சௌதநஹல்லி (Choudanahalli) கிராமத்தில் இன்று அதிகாலை 38 குரங்குகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட குரங்குகள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட தகவலின்படி, குரங்குகளுக்கு விஷம் கொடுத்து அடித்துக்கொன்றது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, குரங்குகளை சாக்கு மூட்டையில் கட்டி சக்லேஷ்பூர் பெகுர் கிராஸ் சாலையில் வீசி சென்றுள்ளனர். அவ்வழியாக சென்ற இளைஞர்கள் சிலர், சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்த பிறகுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.

karnataka
30 குரங்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூரர்கள்

இறந்த நிலையில் குரங்குகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சாக்கு மூட்டைக்குள் காயமடைந்த நிலையிலிருந்த 20 குரங்குகள் மீட்கப்பட்டது.

சாக்கு மூட்டைக்குள் மூச்சுவிட முடியாமல் தவிப்பு

அதில், 18 குரங்குகள் தண்ணீரை குடித்துவிட்டு, அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது. 2 குரங்குகளுக்கு மட்டும், கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்பகுதி இளைஞர்கள் சாக்கு மூட்டையை பிரித்தபோது, பல குரங்குகள் மூச்சுவிடப் போராடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

karnataka
இறந்த குரங்குகளுக்கு சடங்கு செய்த வனத்துறை

குரங்குகளின் உடல் பச்சை நிறத்தில் இருப்பதால், விஷம் கொடுத்தது உறுதியாகியுள்ளது. இரக்கமின்றி குரங்குகளைக் கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விவகாரம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அய்யய்யோ மாட்டிக்கிச்சே! சுட்டி நாய் செய்யும் சேட்டை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.