கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் படிப்பதற்கு வந்த 200க்கும் மேற்பட்ட கேரள மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உருமாறிய கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக அவர்களின் மாதிரிகளை நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்குச் சுகாதாரத் துறையினர் அனுப்பியுள்ளனர்.
ஏனென்றால், சமீபத்தில் பிரிட்டனிலிருந்து கேரளா வந்தவர்களுக்கு உருமாறிய கரோனா பாதிப்பு உறுதியானது. இதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சினிமா பாணியில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.5 லட்சம் திருடியவர் கைது!