நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ராகேஷ் சின்ஹா எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் பட் இன்று பதிலளித்தார்.
அதில், இந்திய ராணுவத்தில் மொத்தம் ஒரு லட்சத்து நான்காயிரத்து 653 காலியிடங்கள் தற்போது உள்ளன. அதில், ராணுவ வீரர்களுக்கான காலியிடங்கள் 97,177 எனவும், உயர் அலுவலர்கள் பதவிக்கான காலியிடங்கள் 7,476 எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் விமானப்படையில் ஐந்தாயிரத்து 471 காலியிடங்களும், கப்பல்படையில் 12 ஆயிரத்து 431 காலியிடங்களும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலியிடங்களை விரைந்து நிரப்ப அரசு முனைப்பு காட்டிவருவதாக அமைச்சர் கூறியுள்ளார். மேலும், பழங்குடியின தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் பெயரில் புதிய ராணுவ படைப்பிரிவு ஏற்படுத்தப்படுமான என உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு அமைச்சர், அரசின் கொள்கைப்படி, நாட்டின் அனைத்து குடிமக்களும், சாதி, மத, இன, குழு பேதமின்றி ராணுவத்தில் சேரலாம். அதேபோல் அரசின் கொள்கையின்படி, நாட்டு விடுதலைக்குப்பின் புதிய படை பிரிவை ஏற்படுத்த இயலாது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் அமித் ஷா