பஞ்சாப்: பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே 29ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். லாரன்ஸ் பிஷ்ணோய் என்ற உள்ளூர் கேங்க்ஸ்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையை செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலைச் சேர்ந்த தீபக் தினு மற்றும் அவரது இரண்டு உதவியாளர்களை கைது செய்தனர். தீபக் தினுதான் பாடகர் சித்துவை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.
இந்த வழக்கில் கோல்டி பிரார் உள்ளிட்ட வேறு சில கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேங்ஸ்டர் தீபக் தினு போலீஸ் காவலில் இருந்து தப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு வழக்கு விசாரணைக்காக மான்சா மாவட்டத்தில் உள்ள குற்றப் புலனாய்வு அலுவலகத்திற்கு வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, தீபக் தப்பியோடியதாக தெரிகிறது. தீபக்கை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைந்து பிடித்துவிடுவோம் என்றும் காவல்துறை ஐஜி முக்விந்தர்சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இளைஞர்களை குறிவைக்கும் கேங்க்ஸ்டர் கோல்டி ப்ரார்