டெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அடுத்த சில நாள்களுக்கு கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரள கடற்கரையோரங்களில் தென்மேற்கு பருவகாற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் மே 27க்கும் பின் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் அந்தமான் தீவுகளில் தொடங்கிய தென் மேற்கு பருவ மழை கேரளாவில் மே 31 வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அந்தமான் மற்றும் கேரளாவில் உண்டான தென்மேற்கு பருவகாற்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாள்களுக்கு மழை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் அடுத்த 7 நாள்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளூர், சேலம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஒரே நாளில் 2 ஆயிரமாக உயர்ந்த கரோனா பாதிப்பு!