தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் புதுச்சேரியில் ரேஷன் அட்டைக்கு, தலா 2 கிலோ சக்கரை இலவசமாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்தாண்டு, இதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை.
இதற்கு மாறாக, ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும், தலா இரண்டு கிலோ சக்கரைக்கு பதிலாக அவரவர் வங்கிக் கணக்கில் பணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும், சக்கரைக்கு பதிலாக பணம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள ரேஷன் அட்டைதார்களுக்கு, இரண்டு கிலோ சக்கரைக்கு பதிலாக, வங்கிக் கணக்கில் பணம் செலுத்த, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், வருமான வரி மற்றும் சரக்கு, சேவை வரி செலுத்துபவர்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் இந்த சலுகை கிடையாது எனவும், கிரண்பேடி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் தீபாவளி பட்டாசு விற்பனை மந்தம் - வியாபாரிகள் வேதனை