ETV Bharat / bharat

தம்பி அனுப்பிய ரூ.500 மணி ஆர்டர்... ஷாக்கான அக்கா... நடந்தது என்ன? - ரூர்கேலாவில் சம்பவம்

ரூர்கேலாவில் பிரமோத் பிரதான் என்பவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய 500 ரூபாய் மணி ஆர்டர், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவரது சகோதரியின் கையில் கிடைத்துள்ளது.

Money
Money
author img

By

Published : Dec 2, 2022, 4:41 PM IST

ரூர்கேலா: பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாகி பல ஆண்டுகள் ஆகின்றன. ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளைக் கடந்து, டிஜிட்டல் நாணயமே புழக்கத்திற்கு வந்தாயிற்று. தற்போதைய நிலையில், உலகளவில் ஒரு பணப் பரிவர்த்தனையை செய்ய சில விநாடிகள் மட்டுமே போதும். அப்படியிருக்கையில், வெறும் 500 ரூபாய் ஒருவரை சென்றடைய நான்கு ஆண்டுகள் ஆனது என்றால் நம்ப முடிகிறதா? ஆம். அப்படி ஒரு சம்பவம் ஒடிஷா மாநிலத்தில் நடந்துள்ளது.

ஒடிஷா மாநிலம், ரூர்கேலாவில் வசித்துவருபவர், பிரமோத் பிரதான். இவரது சகோதரி சுமித்ரா பிஸ்வால், ரூர்கேலாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தின் டென்சா பகுதியில் வசித்து வருகிறார்.

பிரமோத், கடந்த 2018ஆம் ஆண்டு சாவித்ரி விரதத்தின்போது, தனது சகோதரிக்கு 500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியிருந்தார். ரூர்கேலாவில் செக்டார் 19ல் உள்ள தபால் நிலையத்திலிருந்து மணி ஆர்டரை அனுப்பினார். அந்த மணி ஆர்டர் சுமித்ராவுக்கு அப்போது கிடைக்கவில்லை. அதனால், சகோதரனிடம் பணம் இல்லை. அதனால் தனக்கு அனுப்பவில்லை என சுமித்ரா நினைத்துக்கொண்டார். அதன் பிறகு இந்த மணி ஆர்டர் குறித்து, இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அதை மறந்தே விட்டார்கள்.

இந்த நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 26ஆம் தேதி, தம்பி பிரமோத் பிரதான் அனுப்பிய மணி ஆர்டர், அக்கா சுமித்ராவுக்கு கிடைத்துள்ளது. அது, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாவித்ரி விரதத்தின்போது சகோதரன் அனுப்பிய மணி ஆர்டர் என்பதை அறிந்த சுமித்ரா அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. இந்த தாமதத்திற்கு தபால் நிலையத்தின் அலட்சியம்தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். அதேபோல், பிரமோத் பிரதானும், அவரது வழக்கறிஞர் ஜஹானந்தா சாஹுவும் தபால் துறையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ரூர்கேலா அஞ்சல்துறை கண்காணிப்பாளர் சர்பேஸ்வர் சவுத்ரியிடம் கேட்டபோது, இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பிறகே தபால் துறையில் நடந்த குளறுபடியை கண்டறிய முடியும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த பெண் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.