மும்பை: மும்பையில் உள்ள குடியிருப்புப்பகுதியை மாற்றியமைப்பதில் நிதி முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அலுவலர்கள் கடந்த 1ஆம் தேதி கைது செய்தனர். அவரை ஆக.4ஆம் தேதிவரை அமலாக்கத்துறை காவலில் சிறையில் அடைக்க, அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் ஆக.4 வரை மற்றும் ஆக.8 வரை என இருமுறை அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, அமலாக்கத்துறை காவல் முடிவடைந்து ஆக. 8ஆம் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் 14 நாட்கள் காவல் முடிவடைந்ததையடுத்து, சஞ்சய் ராவத் இன்று(ஆக.22) மீண்டும் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சஞ்சய் ராவத்தின் நீதிமன்றக்காவலை செப்டம்பர் 5ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க:சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கைது - அமலாக்கத்துறை அதிரடி!