ETV Bharat / bharat

பற்றி எரியும் விவசாயிகளின் போராட்டம் - வேளாண் சட்டம் குறித்து வாய் திறந்த மோடி!

டெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை அளித்திருப்பதாக 'மனதில் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

மோடி
மோடி
author img

By

Published : Nov 29, 2020, 1:00 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள், கடந்த மூன்று நாள்களாக டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க காவல் துறையினர் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.

காவல் துறையைப் பயன்படுத்தும் மத்திய அரசு விவசாயிகளை அடக்குமுறைக்குள்ளாக்கிவருவதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பல்வேறு வாய்ப்புகளை அளித்திருப்பதாக 'மனதில் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவில் விவசாயம் மற்றும் அதோடு தொடர்புடையவற்றுடன் ஒரு புதிய பரிமாணம் இணைகிறது. கடந்த நாட்களில் நிறைவேற்றப்பட்ட விவசாயத் துறை சீர்திருத்தங்கள், விவசாயிகளின் வாழ்வுகளில் புதிய சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

பல ஆண்டுகளாக விவசாயிகள் எந்தக் கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்களோ, அவற்றை ஏதோ ஒரு காலகட்டத்தில், அரசியல் கட்சிகள் அனைத்துமே நிறைவேற்றித் தருவதாக வாக்களித்திருந்தார்கள். அந்தக் கோரிக்கைகள் இன்று நிறைவேறியிருக்கின்றன. தீவிரமான கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், நாடாளுமன்றம் இந்த விவசாயத்துறை சீர்திருத்தங்களுக்குச் சட்டப்பூர்வமான அந்தஸ்தை நல்கியிருக்கிறது.

இந்தச் சீர்திருத்தங்கள், விவசாயிகளை பல்வேறு இன்னல்களிலிருந்து மட்டும் விடுவிக்கவில்லை. மாறாக, அவர்களுக்குப் பல உரிமைகளையும் பெற்றுத் தந்திருக்கிறது. புதிய சாத்தியக்கூறுகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்த உரிமைகள் மிகக்குறைந்த காலகட்டத்தில், விவசாயிகளின் பிரச்னைகளைக் குறைக்கத் தொடங்கி விட்டன.

இந்தச் சட்டத்தில் ஒரு மகத்தான விஷயம் என்னவென்றால், இதன் ஒரு உட்பிரிவுக்கு உட்பட்டு, அந்தப் பகுதியின் சார்பு உட்கோட்ட நீதிபதி ஒரு மாதத்திற்குள்ளாக விவசாயி அளித்திருக்கும் புகாரின் மீது முடிவை எடுத்தாக வேண்டும். இப்படிப்பட்ட வலுவானதொரு சட்டம் விவசாயிகளுக்கு பக்கபலமாக இருக்கும் போது, அவர்களது பிரச்னைக்கான தீர்வு காணப்பட்டே ஆகும். சட்டம் குறித்த புரிதல்கள்-வதந்திகளைத் தாண்டி, சரியான தெரிதல், அனைவருக்கும் மிகப்பெரிய வகையில் பலம் சேர்க்கும்" என்றார்.

இதையும் படிங்க: நெருக்கடி காலத்தில் கலாசாரம் முக்கிய பங்காற்றியது - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.