டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் 29.4 கி.மீ தொலைவிலான தாஹ்மஹால், ஆக்ரா கோட்டை மற்றும் சிகந்திரா போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டம் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ .8,379.62 கோடியில் மதிப்பிடப்பட்டுள்ள இத்திட்டம் ஐந்து ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை சுற்றுலாத் தலங்களின் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களை இணைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கான தொடக்க விழா ஆக்ராவில் உள்ள 15 பட்டாலியன் பிஏசி அணிவகுப்பு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த மெட்ரோ திட்டம் ஆக்ரா மக்களின் வாழ்வை எளிமையாக்கும். அங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதையும் படிங்க: இந்த மெட்ரோ ரயில்ல பயணம் செய்ய முடியாது... ஆனால் படிக்கலாம்!