ETV Bharat / bharat

புதிய எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு பயிற்சி - mlas meeting in puducherry assembly

புதுச்சேரியில் புதிததாக பதவியேற்ற எம்.எல்.ஏக்களுக்கு, சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த பயிற்சி, சபாநாயகர் லட்சுமி நாராயணன் தலைமையில் இன்று வழங்கப்பட்டது.

mlas meeting
mlas meeting
author img

By

Published : May 29, 2021, 3:24 PM IST

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில், என்.ஆர். காங்கிரஸ் பத்து இடங்களிலும், பாஜக ஆறு இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் புதிததாக பதவியேற்ற எம்.எல்.ஏக்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் இன்று (மே.29) நடத்தப்பட்டது.

புதுச்சேரி மாநில சட்டபேரவை செயலகம் சார்பாக நடத்தப்பட்ட இந்த முக்கிய பயிற்சி முகாமிற்கு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். இதில், புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரிச்சர்ட் ஜான் குமார், சாய் சரவணக்குமார், ராமலிங்கம், தட்சணாமூர்த்தி, கே.எஸ்.பி. ரமேஷ், ஏ.கே.டி ஆறுமுகம், செந்தில் குமார், சம்பத், பிரகாஷ் குமார், சிவசங்கரன், அசோக் பாபு, லட்சுமி காந்தன், கோலப்பள்ளி சீனுவாச அசோக் ஆகியோர் கலந்துகொன்டனர்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை

இந்தப் பயிற்சி முகாமிற்கு மாநில சட்டப்பேரவைச் செயலர் முனுசாமி முன்னிலை வகித்தார். வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடர்களில் புதிய எம்.எல்.ஏக்கள் எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பாக இந்த முகாமில் விரிவாக எடுத்துரைப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.