புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் உள்ளிட்ட பிராந்திய பகுதிகளின் சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராக, ஏனாம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணாராவ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான பாராட்டு விழா ஜனவரி 6ஆம் தேதி ஏனாம் பிராந்திய பகுதியில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வுவாக சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தொகுதி எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவிற்கு, சிறந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கான சான்றிதழும், தொடர்ந்து, 25 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பாராட்டு விழாவும் அரசு சார்பில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள் பங்கேற்வுள்ளனர். இவ்விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் நாராயணசாமி வரும் 5ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து கார் மூலமாக பயணித்து ஏனாம் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில், இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில், இன்று (ஜனவரி 2) ஏனாம் பகுதியில் நடைபெற்றது. இதில்அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்: துரிதமாகச் செயல்பட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்!