மத்திய பிரதேசம் (ஜபல்பூர்): மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் விவசாயி சங்கல்ப் சிங் பரிஹார், தனது தோட்டத்தில் மியாசாகி வகை மாம்பழங்களை பயிரிட்டுள்ளார். மியாசாகி வகை மாம்பழம், அரிய வகை மற்றும் உலகின் விலை உயர்ந்த மாம்பழம் என கூறப்படுகிறது.நீல நிறத்தில் உள்ள இந்த மாம்பழம், ஜப்பானின் மியாசாகி நகரில் அதிகம் விளையக் கூடியது. அதனால், பழத்திற்கு இப்பெயர் வந்தது.
இந்த மாம்பழங்கள் 'தையோ-நோ-டெமாகோ' அல்லது 'எக்ஸ் ஆஃப் சன்ஷைன்' Eggs of Sunshine (Taiyo-no-Tamago in Japanese) எனவும் அழைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த மாம்பழம் ஒரு கிலோ 2.7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
![ஜபல்பூர் மாம்பழ தோட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15786694_aam.jpg)
இந்த அரிய வகை மாம்பழத்தை விவசாயி சங்கல்ப் சிங் பரிஹார் தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ளார். இதைப் பார்ப்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மக்கள் வந்து செல்வர். பழங்கள் திருடு போவதை தடுக்கும் வகையில், மரத்தின் அருகில் 'பழங்களை தொட வேண்டாம்' என பலகை வைத்துள்ளார். மேலும், அண்மையில் மரங்களை கண்காணிப்பதற்கு என 3 பாதுகாவலர்கள், 6 நாய்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளார். ஆங்காங்கே சிசிடிவி கேமராவும் பொருத்தினார்.
![ஜபல்பூர் மாம்பழ தோட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15786694_taam.jpg)
இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு முன் சிலர் குழந்தைகளுடன் வந்து தோட்டத்தை சுற்றிப்பார்த்து சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பின் செடிகளை பராமரிப்பாளர்கள் பார்த்தபோது குறைந்த பழங்களே இருந்துள்ளது. சில பழங்கள் பறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உரிமையாளர் பரிஹாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மாம்பழங்கள் திருடு போனது வேதளை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Video: கொட்டும் மழையில் சாலை பணி: 4 அலுவலர்கள் சஸ்பெண்ட்!