மிர்சாபூர் : உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள விந்தியாச்சல் தாமின் மா விந்தியவாசினி மந்திர் என்ற இடத்தில் பூசாரிகள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் ஒரு பூசாரி பலமாக தாக்கப்பட்டார். அவரின் தலையிலிருந்து இரத்தம் கொட்டியது. எனினும் அவரை விடாமல் எதிர் தரப்பு பூசாரிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான காணொலி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது குறித்து காவலர்கள் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில், பாதிக்கப்பட்ட கோயில் பூசாரியும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவம் தொடர்பாக ஏ.எஸ்.பி. சஞ்சய் வர்மா கூறுகையில், “சுவாமி தரிசனம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியுள்ளது. பூசாரிகள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பான காட்சிகள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் பிடிங்க : நேருக்கு நேர் மோதிக்கொண்ட நடிகைகள்!