உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மீரட் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளார். மதியம் டியூஷன் சென்ற சிறுமியை கடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிள்ளனர்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பு, சிறுமி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தந்தை ரோஷன் கூறுகையில், "எங்களது மகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய கும்பல் தான், விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர்.
இறப்பதற்கு முன்பு நடந்த எல்லாவற்றையும் அவள் எங்களிடம் கூறினாள். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால், அவள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" எனக் கூறினார்.
ஆனால், காவல் துறையினரின் முதற்கட்ட கூற்றுப்படி, "விஷம் சாப்பிட்டு தான் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. சிறுமியின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏப்ரல் ஃபூல் பண்றீங்கனு நினைச்சோம்... கிராமத்தினர் அலட்சியத்தால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்