பஞ்சாப் மாநிலம் பட்டியாலா நகரின் ஷெரன்வாலா கேட்டில் அமைந்துள்ள தனியார் வங்கியின் பிரதான கிளையில் இருந்து 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்துடன் சிறுவன் தலைமறைவான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் நடந்த இடம் யாரும் செல்ல முடியாத தடை செய்யப்பட்ட பகுதி என்பதால், அங்கு சென்று பணத்துடன் சிறுவன் ஓடிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வங்கி ஊழியர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி வீடியோ பதிவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த மாணவிகள்!