ETV Bharat / bharat

சாலை விபத்தில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங் தேவ் - Minister TS Singhdev car collided

சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங்தேவ் கார் விபத்தில் சிக்கினார்.

சாலை விபத்தில் சிக்கிய சுகாதார அமைச்சர் டிஎஸ் சிங் தேவ்

author img

By

Published : Feb 3, 2023, 8:33 PM IST

பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சரும் சுர்குஜா எம்எல்ஏவுமான டிஎஸ் சிங்தேவ் இன்று (பிப். 3) சாலை விபத்தில் சிக்கினார். இவர் ராய்ப்பூரில் இருந்து அம்பிகாபூருக்கு காரில் புறப்பட்டார். இந்த கார் பிலாஸ்பூருக்கு அருகே நங்காட் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது 12:30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது.

இந்த விபத்தில் காரின் 2 டயர்கள் வெடித்தன. இருப்பினும், அமைச்சருக்கும், ஓட்டுநருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை. முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டப்பின் சிங்தேவ் மற்றொரு காரில் அம்பிகாபூருக்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து பிலாஸ்பூர் போலீசார் தரப்பில், நங்காட் அருகே அமைச்சர் சிங்தேவின் கார் சென்றுகொண்டிருந்தபோது குறுக்கே இருசக்கர வாகனம் வந்துள்ளது.

இதனால், அமைச்சரின் கார் ஓட்டுநர் பிரேக் அடித்தது மட்டுமல்லாமல், திருப்ப முயற்சித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டுநருக்கும் நல்வாய்ப்பாக காயம் ஏற்படவில்லை. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சிங்தேவ், தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. அதற்காக கடவுளுக்கு நன்றி" எனப் பதவிட்டுள்ளார். அமைச்சர் சிங்தேவ் மூத்த காங்கிரஸ் தலைவராவார். சத்தீஸ்கரில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உள்ளார். இவருக்கு ஊராட்சித்துறை அமைச்சராகவும் பதவி அனுபவம் உண்டு. 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போது தேர்தல் அறிக்கையை தயார் செய்வதில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, சோனியா காந்தியின் குடும்பத்துக்கும் மிக நெருக்கமானவராக கருதப்படுகிறார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 6 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.