இந்தியாவில் பள்ளிகளில் இணைய சேவை வசதி கொண்ட மாநிலங்களின் பட்டியல் குறித்த தகவலை மத்திய கல்வி அமைச்சக இணை அமைச்சர் அண்ணபூர்னா தேவி மக்களவையில் வெளியிட்டார். அதன்படி, நாட்டிலேயே சண்டிகர் மாநிலத்தில்தான் 100 அரசு பள்ளிகளில் இணைய சேவை வசதி உள்ளது என கல்லி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் லட்சத்தீவும்(93.33%), மூன்றாம் இடத்தில் டெல்லியும்(88.18%), நான்காம் இடத்தில் கேரளாவும்(87.16%) உள்ளது. அதேவேளை 10 விழுக்காடு இணைய சேவை வசதி கூட பெறாத மாநிலங்களில் பல பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில், மேகாலயா மாநிலத்தில் தான் மிகக்குறைவான பள்ளிகளில் இணைய சேவை வசதி உள்ளது. அங்கு 1.27 விழுக்காடு பள்ளிகளில் மட்டுமே இணைய சேவை வசதி உள்ளது.
அதேபோல், பிகாரில் 2.05%, ஒடிசாவில் 2.72%, மத்தியப் பிரதேசத்தில் 3.81%, அசாமில் 4.32% பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி சென்று சேர்ந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இணைய வசதியை மேம்படுத்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து அதிகவேக பைபர் ஆப்டிக் கேபிள் வசதியை அமைக்கும் திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளது.
இதையும் படிங்க: TODAY HOROSCOPE: மார்ச் 15 ராசிபலன் - உங்க ராசி எப்படி?