டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் 1996-2001ஆம் ஆண்டில் அமைச்சராக பொன்முடி இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது 2002ஆம் ஆண்டு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரணை செய்தது. இந்த வழக்கில் இதுவரை 169 சாட்சிகளிடம் விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின் இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: 2 Thousand Rupees : இன்றுடன் காலாவதியாகும் ரூ.2ஆயிரம் நோட்டுகள்! கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?
இந்த வழக்கை விசாரணை செய்த வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விடுதலை செய்து உத்தரவிட்டது. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக் குவிப்பு வழக்கைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற விசாரணையின் போது, பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றியதில் தவறு நடந்துள்ளதாகவும், இந்த வழக்கில் 4 நாட்களில் 226 பக்கம் கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்து.
இதையும் படிங்க: கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்வில் வெளியேற்றப்பட்ட நடிகர் சித்தார்த் - மன்னிப்பு கோரிய கன்னட நடிகர்கள்!
இந்த வழக்கில் தமிழ்நாடு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்த நிலை இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணை செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி சார்ப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனைச் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்யத் தடை கோாி உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தீர்மானம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!