ETV Bharat / bharat

உதய்பூர் கொலை வழக்கில் பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளது - ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் - ராஜேந்திர யாதவ்

உதய்பூர் கொலை வழக்கில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புள்ளதாகவும், இது இரண்டு மதத்தினருக்கு இடையிலான சண்டை இல்லை என்றும் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Rajasthan
Rajasthan
author img

By

Published : Jun 29, 2022, 7:15 PM IST

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில், நேற்று (ஜூன் 29) கன்ஹையா என்பவர் தலையை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கொலையாளிகள் இருவர் வெளியிட்ட காணொலியில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய நூபுர் சர்மாவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக இந்த கொலையை செய்ததாக கூறியிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து கன்ஹையாவை கொலை செய்ததாக கருதப்படும் முகமது ரியாஸ் மற்றும் கௌஸ் முகமது ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்பு உள்ளதாக ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் ராஜேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். இந்த படுகொலை சம்பவம் இரண்டு மதத்தினருக்கு இடையேயான சண்டை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கௌஸ் முகமது, கடந்த 2014-15இல் கராச்சியில் 45 நாட்கள் பயங்கரவாத அமைப்புகளிடம் பயிற்சி எடுத்துள்ளார் என்றும், இதேபோல் அரபு நாடுகளுக்கும், நேபாளத்திற்கும் சென்று வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், சுமார் 10 தொலைபேசி எண்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவருடனும் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கன்ஹையா கொலை சம்பவத்தால் உதய்பூர் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே கன்ஹையாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதய்பூர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏழு பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதய்பூர் கொலை வழக்க விசாரிக்க NIA நியமனம் - உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.