ETV Bharat / bharat

சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் இந்தாண்டுக்குள் நிறைவடையும் - தயாநிதியின் கேள்வியும் நிதின் கட்கரியும் பதிலும்!

சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை குறித்து நாடாளுமன்றத்தில் சென்னை மத்திய தொகுதி எம்.பி., தயாநிதிமாறன் எழுப்பிய கேள்விக்கு, விரைவுச்சாலை பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார்.

minister-nitin-gadkari-said-chennai-bangalore-expressway-works-will-completed-this-year
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை பணி இந்தாண்டு நிறைவடையும் - நிதின் கட்கரி
author img

By

Published : Feb 9, 2023, 5:54 PM IST

சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் இந்தாண்டுக்குள் நிறைவடையும் - தயாநிதியின் கேள்வியும் நிதின் கட்கரியும் பதிலும்!

டெல்லி: சென்னை - பெங்களூரு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 100 கிலோ மீட்டரைக் கடப்பதற்கு 4 மணிநேரம் ஆகிறது. சாலையில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணிகளின் நிலை என்ன, விரைவுச் சாலை பணியின் நிலை என்ன என்று சென்னை மத்திய தொகுதி எம்.பி.,தயாநிதிமாறன் மக்களவையில் இன்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, 'திட்டங்களை செயல்படுத்தி முடிக்க மத்திய அரசுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை' என்றார். 'விரைவுச்சாலையின் பணிகள் பெங்களூருவில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் நிலமோ, அனுமதியோ வழங்காமல் ஒப்பந்ததாரர்களால் எப்படி வேலை பார்க்க முடியும்' என்றார்.

மேலும், 'இந்த விரைவுச்சாலை பணி நிறைவடைந்தால் சென்னை - பெங்களூரு இடையே 2 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும். ஏற்கனவே பெங்களூருவில் இருந்து மைசூர் வரை பணிகள் முடிவடைந்து விட்டன. இதனால் பெங்களூருவில் இருந்து மைசூரை 1 மணி நேரத்தில் அடைந்து விடமுடியும். சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்' எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னருக்கு அஞ்சல் தலை வெளியிடுக - அப்துல்லா எம்.பி. கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.