புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து சம்பந்தமாக காவல்துறை உயர் அலுவலர்களின் ஆலோசனை கூட்டம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது.
இதில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து வரும் மக்களுக்கு ஏதுவாக, வரும் நவம்பர் 8 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதைக் கருத்தில் கொண்டும் போக்குவரத்தை சரி செய்ய ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அதை தடுக்கும் வகையில் மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பது தொடர்பாகவும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
குண்டர் சட்டத்தில் கைது
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், "புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்க முக்கிய ரவுடிகள் 32 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளுக்கு அங்குள்ள ஊழியர்கள் உதவி செய்தால் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள். முக்கிய கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கோமாளிகளே 'இல்லம் தேடி கல்வி' திட்டம்தான் திராவிடம் - ஸ்டாலின் அதிரடி