புதுச்சேரி: ’துளிர்’ உதவிக்கரம் அறக்கட்டளை, புதுச்சேரியின் பல்லுயிர் பாதுகாத்தல் குழு ஆகியவற்றின் மூலமாக பழ மர விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டு தொலைதூரம் பயணிக்கும் மக்களிடம் கொடுக்கப்படுகிறது.
அவர்களிடம் பயணத்தில் காணப்படும் தரிசு நிலங்களில் அவற்றை எரியும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன்மூலம், இந்த மழைக்காலத்தில் அவ்விதைகள் துளிர்விட்டு காடுகள் வளம்பெற்று பல்லுயிர் பாதுகாப்பு மேம்படும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இவ்விதைப் பந்துகளை வழங்கும் விழா இன்று (நவ.18) புதுச்சேரி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
அமைச்சர் பங்கேற்பு
இதில், புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு பொது மக்களுக்கு 500க்கும் மேற்பட்ட விதைப் பந்துகளை வழங்கி விழாவைத் தொடங்கி வைத்தார். மேலும், இந்நிகழ்வு அடுத்த ஏழு நாள்கள் வரை தொடர்ந்து நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், புதுச்சேரி போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் சிவக்குமார், பொது மேலாளர் ஏழுமலை, இணை மேலாளர் புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Viral Video: அசால்ட் காட்டிய யானையின் அசத்தல் காணொலி