டெல்லியில் கடந்த சில மாதங்களாக சராசரியை விட அதிகளவு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுவந்தது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. மக்கள் பெரும்பாலான நேரங்களில் மூடுபனியுடனே வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையில், இன்று(பிப்.14) டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.6 டிகிரி செல்சியஸாக இருந்தது எனவும், இவை சராசரி வெப்பநிலையைவிட இரண்டு புள்ளிகள் குறைவாக உள்ளது என்றும் அறியப்படுகிறது. இருப்பினும், இன்று(பிப்.14) மாநிலத்தில் மூடுபனி விலகி தெளிவான வானம் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை நெருங்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்த வானிலை ஆய்வு மைய அலுவலகத்தினர், இன்று காலை 8.30 மணியளவில் காற்றில் 100 விழுக்காடு ஈரப்பதம் இருந்தது எனவும் கூறியுள்ளனர்.