உஜ்ஜெயினி: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயினி அஸ்லானா என்ற இடத்தில் வசித்துவரும் தம்பதி ஒருவர் தனது மூன்று மகள்கள் மற்றும் மகனுக்கு ஒரே மேடையில் திருமணத்துக்கு மே5ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்தப் பகுதியில் மாலை 7 மணிக்கெல்லாம் தினந்தோறும் பவர்கட் (மின்தடை) ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. இந்த நிலையில் இரவு 11 மணியளவில் தாலிகட்டும் நிகழ்வுக்கு முன்னதாக மணமகன், மணமகள் ஆகியோர் மாறி நிற்பது பெற்றோருக்கு தெரியவந்தது.
அதாவது மணமக்கள் அக்னியை சுற்றி வரும்போது மணப்பெண்ணின் பெற்றோர் கண்டுபிடித்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியுற்ற பெற்றோர் உடனடியாக சமயோஜிதமாக செயல்பட்டு மணமகள்களை சரியான ஜோடி பக்கம் கொண்டு நிறுத்தினர்.
இதனால் மணவிழாவில் திடீர் கூச்சல் குழப்பத்துடன் நகைச்சுவையும் ஏற்பட்டது. இதற்கிடையில் மணமகன் வீட்டார் தகராறில் ஈடுபடத் தொடங்கினர். மத்தியப் பிரதேசத்தில் மின் தடையால் மணமகன் வேறோரு பெண்ணின் கழுத்தில் தாலிகட்ட இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...!