நாட்டின் தடுப்பூசி திட்டப் பணிகளில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில் மூன்றாம் அலையை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். தற்போதைய தடுப்பூசி பணிகள் அடைய வேண்டிய இலக்கை காட்டிலும் 27% குறைவாக உள்ளது என்று ராகுல் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
Mind the gap!#WhereAreVaccines pic.twitter.com/0VNhT6K8fn
— Rahul Gandhi (@RahulGandhi) July 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mind the gap!#WhereAreVaccines pic.twitter.com/0VNhT6K8fn
— Rahul Gandhi (@RahulGandhi) July 3, 2021Mind the gap!#WhereAreVaccines pic.twitter.com/0VNhT6K8fn
— Rahul Gandhi (@RahulGandhi) July 3, 2021
நாட்டில் இதுவரை மொத்தம் 34 கோடியே 54 லட்சத்து 08 ஆயிரத்து 527 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 28 கோடியே 30 லட்சத்து 22 ஆயிரத்து 988 பேருக்கு முதல் டோஸும், 6 கோடியே 23 லட்சத்து 85 ஆயிரத்து 539 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடா? மீண்டும் விசாரணை