புல்வாமா: ஜம்மு - காஷ்மீர் க்ரூ பாம்போர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த, வீரர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
முன்னதாக, நேற்று (ஆகஸ்ட் 19) மாலை, ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎஃப் சோதனைச் சாவடி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில், குல்காமின் தேவ்சார் பகுதியில் ஜம்மு - காஷ்மீர் அப்னி கட்சி தலைவர் குலாம் ஹசன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இதேபோல, கடந்த வாரம் குல்காம் மாவட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஜாவேத் அகமது தார், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதி கைது