ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காவல் துறை தலைவர் தில்பாக் சிங் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் குப்வாரா பகுதியில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் முன்பைவிட பாதியாக குறைந்துள்ளது. பயங்கரவாத செயல்களில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.
இளைஞர்கள் தங்கள் கல்வி, வேலை, வாழ்க்கை குறித்து கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. எனவே பொறுப்பற்ற செயல்களில் அவர்கள் ஈடுபடக் கூடாது.
குறிப்பாக, குப்வாரா, பந்திபூரா, சோபூர் ஆகிய மாவட்டங்களில் சூழல் மேம்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவலர்கள் இரவு பகல் பாராமல் சட்டம் ஒழுங்கை காக்க பணியாற்றிவருகின்றனர். எனவே விரைவில் ஜம்மு காஷ்மீீர் விரைவில் அமைதியான பகுதியாக மாறும்" என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு நிரந்தரத் தலைவர் தேவை - சசி தரூர் குரல்