மும்பை : மகாராஷ்டிர அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அறியப்பட்டவர் முரளி தியோரா. இவரது மகன் மிலிண்ட் தியோரா, கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் மக்களவை எம்.பியான மிலிண்ட் தியோரா, மகாராஷ்டிரா காங்கிரசில் பொறுப்பிலும் இருந்து வந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறூப்பில் இருந்து விலகுவதாக மிலிண்ட் தியோரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "இன்று எனது அரசியல் பயணத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாத்தை நிறைவுக்கு கொண்டு வந்து உள்ளேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.
காங்கிரஸ் குடும்பத்தினுடனான எனது 55 ஆண்டுகால உறவு நிறைவுக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவு அளித்து வந்த நண்பர்கள், தன்னார்வலர்கள், தலைவர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், மிலிண்ட் தியோரா, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவின.
அதை மெய்ப்பிக்கும் வகையில் மகாராஷ்டிர முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான வார்ஷாவில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். தெற்கு மும்பை தொகுதியில் சக்தி வாய்ந்த தலைவராக கருதப்படும் மிலிண்ட் தியோரா சிவ சேனாவில் இணைந்து இருப்பது, அக்கட்சிக்கு கூடுதல் விரைவில் வர பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வசதியாக அமைந்ததாக கருதப்படுகிறது.
இதற்கு முன் கடந்த 2012 - 2014ஆம் அண்டுகளில் மத்திய தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிலிண்ட் தியோரா ராஜினாமா செய்ததில் பிரதமர் மோடியின் பங்கு இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி இருந்தார். தியோராவின் ராஜினாமா முடிவு பிரதமர் மோடியின் உடையது என்றும் இதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி இருந்தார்.
இதையும் படிங்க : மகாராஷ்டிர அரசியல் திடீர் திருப்பம்! காங்கிரசின் நம்பிக்கையை உடைத்த மிலிண்ட் தியோரா!