ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் இன்று (நவம்பர் 20) நள்ளிரவு 2.27 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 2.4 ரிக்டர் அளவிற்குப் பதிவாகியுள்ளது.
இந்த நடுக்கத்தின் தாக்கம் 10 கி.மீ. சுற்றளவுக்கு உணரப்பட்டது என்றும், ராஜஸ்தான் ஜோத்பூரிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் பதிவாகியுள்ளது எனவும், தேசிய நில அதிர்வு மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது.
சேதம் ஏதுமில்லை
சிரோஹி மாவட்டத்தின் ரியோடார், மாந்தர், அபு ரோடு, மவுண்ட் அபு, பிந்த்வாரா உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித சொத்து சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலைக்கு வந்தனர். முன்னதாக, நேற்று முந்தினம் (நவம்பர் 18) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Kamala Harris: வைட் ஹவுஸின் முதல் பெண் அதிபர்!