தக்ஷினா(கர்நாடாகா): கர்நாடாகா மாநிலத்தில் உள்ள கொடகு மற்றும் தக்ஷினா ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளில் இருந்து வெளியேறினார். . நள்ளிரவு 1.12 மணியளவில் 4 முதல் 5 வினாடிகள் நிலநடுக்கம் நீடித்ததாக கூறப்படுகிறது.
குடகு, தட்சினா ஆகிய மாவட்டங்களின் எல்லையோர மலைப் பகுதிகளில் இந்த வாரம் ஐந்தாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட நில அதிர்வுகளை தொடர்ந்து இப்பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இது குறித்து கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.7 என குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட அதிகாரிகளும், கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும் (கே.எஸ்.டி.எம்.ஏ.) இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் வாகனம் விபத்து... 4 பேருக்கு படுகாயம்...