இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 பைசன் போர் விமானத்தில் நேற்று (ஜன.05) மாலை 8:15 மணிக்கு விமானி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால், விமானி தனது விமானத்தை ராஜஸ்தானின் சூரத்கர் அருகிலுள்ள விமான தளத்தில் பாதுகாப்பாக தரையிறக்க முயன்றார். அப்போது, விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, அவர் விமானத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இந்நிலையில், விமான விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்தியர் ஹிலால் அகமது ரத்தேர்