புனே: மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்தவர் உத்தம் பிரகாஷ் கண்டாரே (65). பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியின்போது அமைச்சராக இருந்தார். இவர் மீது, 37 வயதான பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "கண்டாரேவின் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார். புனேவில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்துக்கு அழைத்து சென்று, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்.
கத்தியை காட்டி மிரட்டில் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நான் மறுத்ததால், பெல்ட்டால் தாக்கினார். இந்த சம்பவம் கடந்த 2012ம் ஆண்டு நடந்தது. எனக்கு ஒரு மகன் இருக்கிறான். எனது மகன் படிப்பு செலவுக்காக கண்டாரே கொடுத்த காசோலை, வங்கி சேமிப்பு கணக்கில் பணம் இல்லை என கூறி திரும்ப வந்துவிட்டது. இதைப்பற்றி அவரிடம் கேட்ட போது கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். திருமணம் செய்து கொள்வதாக என்னை ஏமாற்றிய கண்டாரே மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கண்டாரே மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கண்டாரே மீது சிவசேனா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செல்ஃபி எடுப்பதில் தகராறு: பிரித்வி ஷா நண்பரின் கார் மீது தாக்குதல்!