சோலாபூர்: மகாராஷ்டிர மாநிலம் சோலாபூர் மாவட்டம் பார்சி பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி அதே பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5 ஆம் தேதி சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த இரு இளைஞர்கள் அவர் மீது கடுமையான தாக்குதல நடத்தி உள்ளனர். இந்த கோர தாக்குதலில் சிறுமியின் தலை மற்றும் கை, கால்கள் என உடல் எங்கும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் அந்த இரு இளைஞர்கள் சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்திவிட்டு தப்பி ஓடி உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தாய், ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்த சிறுமியை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
தற்போது அந்த மாணவி மோசமான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்காக போராடி வரும் சிறுமியை கொடூரமாக தாக்கியதாக இரு இளைஞர்களை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் போலீசார் சரியான விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்துவதாகவும் அரசியல் தலையீடு இருப்பதாகவும் கூறி சிறுமியின் தாய் புகார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதம் மாறிய தேவிகுளம் எம்எல்ஏவின் வெற்றி செல்லாது.. தேர்தல் முடிவை ரத்து செய்த நீதிமன்றம்..
இதையடுத்து இந்த வழக்கு மாநிலம் முழுவதும் பரவி பெரும் பேசு பொருளாக மாறியது. இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என 4 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுமியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பேரால் பகிரப்பட்டது. இந்த புகைப்படங்களை வெளியிட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சிவசேனா உத்தவ் அணியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், சிறுமியின் புகைப்படம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இந்நிலையில், வழக்கு விசாரணையில் இருக்கும் போது பாதிப்புக்கு உள்ளான சிறுமியை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தியதாக கூறி சஞ்சாய் ராவத் எம்.பி. மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர் மீது குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேநேரம் சஞ்சய் ராவத் எம்.பி. மீது வீண் பழி சுமத்தப்படுவதாக சிவசேனா உத்தவ் அணியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி மதுக்கொள்கை முறைகேடு வழக்கு: சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்.3 வரை நீட்டிப்பு