ETV Bharat / bharat

தேசிய கீதத்தை அவமதித்ததாக புகார்: மம்தா பானர்ஜியின் மனு தள்ளுபடி

author img

By

Published : Mar 29, 2023, 10:18 PM IST

தேசிய கீதத்தை அவமதித்த வழக்கில், தன் மீது அளிக்கப்பட்ட புகாரை ரத்து செய்யக்கோரி மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கை, மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Mamata banarjee
மம்தா பானர்ஜி

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த விவேகானந்த் குப்தா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "மும்பை சவான் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் தேசியகீதம் ஒலிக்கப்பட்டபோது, எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்த மம்தா, பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். தேசியகீதத்தை அவமதித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மம்தாவுக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து மம்தா தரப்பில் செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோகாடே, மம்தாவுக்கு அனுப்பப்பட்ட சம்மனை தள்ளுபடி செய்தார்.

ஆனால், அதே நேரம் இந்த வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட அவர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200, 202ன் கீழ் வரும் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மம்தா பானர்ஜி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி போர்கார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மம்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்தப் புகார் தொடர்பாக முதலமைச்சர் மம்தாவிடம் விசாரணை நடத்துவது அவருக்கு பெரும் தொந்தரவைத் தரும். அரசு ஊழியரான அவரை இந்தப் புகாரில் விசாரிப்பது தவறு. மம்தா மீதான புகாரை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும்" என வாதாடினார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, "இந்த வழக்கில் செசன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த குறையும் இல்லை. எனவே, இதில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: இரண்டு ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன்.. மனம் திறக்கும் பெண் ஐஏஎஸ்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.