மேற்கு வங்கம்: கில்காட் டீ கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மீனா மிர்தா. சிறு வயது முதலே மன நலன் பாதித்து காணப்பட்ட இவர், அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி, பின்னர் ஓரிரு நாட்களின் மீண்டும் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் வீட்டை விட்டு வெளியேறிய மீனா, மீண்டும் வீடு திரும்பவில்லை. தொடர் தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட உறவினர்கள், பணப் பற்றாக்குறையால் அதை கைவிட்டனர்.
இந்நிலையில், தலை உள்ளிட்ட உடல் பாகங்களில் வெட்டுக் காயங்களுடன் மீனா மிர்தா, வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீனா மிர்தாவை அவரது உறவினர்களுடன் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.
மீனா சிகிச்சைப் பெறும் புகைப்படங்களை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், உள்ளூர் தொண்டு அமைப்பின் உதவியுடன் மீனா மிர்தாவின் உறவினர்களை ஒருவழியாக கண்டுபிடித்தது. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பின் மீனா மிர்தாவைக் கண்ட உறவினர்களின் பாசப் போராட்டம் காண்போரை நெகிழச் செய்தது.
இதையும் படிங்க: உப்பு உற்பத்தியில் குஜராத் மாடலை பின்பற்ற வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன்