ETV Bharat / bharat

19 வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட விடுதலை வேங்கை குதிராம் போஸ் - சுதந்திர தினம் 75

தனது 19ஆம் வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸின் தியாக வரலாறு குறித்த செய்தித் தொகுப்பு.

குதிராம் போஸ்
குதிராம் போஸ்
author img

By

Published : Aug 16, 2021, 6:15 AM IST

தனது 19ஆவது வயதிலேயே தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்டவர்தான் விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸ். இவரின் வீரத்தையும், உறுதியையும் கண்டு அன்றைய ஆங்கிலேய அரசு மிரண்டதென்றால் அது மிகையல்ல.

குதிராம் போஸ் 1889ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் மிதினாப்பூரில் பிறந்தார். பின்னாளில் போஸின் குடும்பம் பிகார் மாநிலம் முசாபர்பூருக்கு குடிபெயர்ந்தது.

விடுதலை வேள்வியில் குதிராம் போஸ்

1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினை நடைபெற அதற்கு எதிராகச் சுதந்திரப் போராட்டத்தில் குதிக்கிறார் குதிராம் போஸ். 1906ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி ஆங்கிலேய அரசால் முதல்முறையாக போஸ் கைதுசெய்யப்படுகிறார்.

சில மாதங்களிலேயே சிறையிலிருந்து தப்பிய போஸ் பல புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். ஆங்கிலேயர்களால் மீண்டும் கைதுசெய்யப்படும் போஸ், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார். அங்குதான் சுவாரஸ்யமான அந்நிகழ்வு ஏற்படுகிறது.

நீதிபதியை அசரவைத்த போஸ்

விடுதலை வேங்கை குதிராம் போஸ்
விடுதலை வேங்கை குதிராம் போஸ்

போஸின் செயல்பாடுகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளிக்க, அதைக் கேட்டு சிரிக்கிறார் போஸ். நீதிபதிக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் கூறிய தீர்ப்பு உங்களுக்குச் சரியாகக் கேட்கவில்லையா என போஸிடம் நீதிபதி கேட்க, தீர்ப்பு நன்றாகவே புரிகிறது. உங்களுக்கு நேரம் கிடைத்தால் என்னிடம் வாருங்கள், வெடிகுண்டு செய்வது எப்படி எனச் சொல்லித்தருகிறேன் என்று துணிச்சலாக முழங்கினார்.

இதுபோன்ற வீரர்களின் தியாகத்தால்தான் நாம் இப்போது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம்.

முசாபர்பூரிலிருந்து பல புரட்சிகரமான செயல்களைப் புரிந்து ஆங்கிலேய ஆட்சியை ஆட்டம் காணவைத்தார் போஸ். போஸ் தனது புரட்சிகர சாகசங்களை நிகழ்த்திய பல இடங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

இருப்பினும் அரசு, மாவட்ட நிர்வாகங்களின் அலட்சியத்தால் சில இடங்கள் மெள்ள சிதிலமடைந்துவருகின்றன. முசாபர்பூருடன் வீரர் போஸுக்கு ஆழமான தொடர்பு உள்ளது எனக் கூறும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் சஞ்சய் பங்கஜ், “விடுதலை வீரரின் பெருமையை அரசு முறையாகத் தெரிந்துவைத்திருக்கவில்லை” என்கிறார் வேதனையுடன்.

போஸ் ஒருமுறை ஆங்கிலேயே நீதிபதி டக்லஸ் கிங்ஸ்போர்டை கொலை செய்ய முயற்சிக்கிறார். இதற்காக தனது நண்பர் பிரபுல்லா சக்கியுடன் இணைந்து திட்டம் தீட்டுகிறார். 1908ஆம் ஆண்டு நீதிபதியின் வாகனத்தின் மீது குண்டு வீசுகிறார் போஸ்.

அந்தத் தாக்குதலில் நீதிபதி சிக்கவில்லை, மாறாக இரண்டு ஆங்கிலேயப் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தச் சம்பவத்திற்குப்பின் குதிராம் போஸை கைதுசெய்ய தீவிரம் காட்டிய ஆங்கிலேயர்கள், சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள புசா ரயில் நிலையத்தில் அவரைக் கைதுசெய்கின்றனர். 1908 ஆகஸ்ட் 11 அன்று குதிராம் போஸ் தூக்கிலிடப்படுகிறார்.

இந்த இளம் வீரரின் புரட்சி செயல்களால் மிரண்டுபோன ஆங்கிலேய அரசு போஸின் 19ஆவது வயதில் அவரைத் தூக்கிலிட்டது. போஸின் இந்தத் தியாக வரலாறு இந்திய விடுதலைப் போரில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

மறக்கப்படும் வரலாறு

இந்தத் தலைச்சிறந்த புரட்சியாளர் சிறை வைக்கப்பட்டிருந்த மத்திய சிறைச்சாலை முசாபர்பூரில் இன்று பாதுகாக்கப்பட்டுவருகிறது. அவரின் நினைவாகச் சிறைச்சாலையின் பெயர் ஷாஹித் குதிராம் போஸ் மத்திய சிறைச்சாலை என மாற்றம்செய்யப்பட்டது.

விடுதலை வேங்கை குதிராம் போஸ்

அவரின் நினைவைப் போற்றும்விதமாக நினைவுநாளன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இப்பகுதி பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படாதது வருந்தத்தக்க விஷயமாகும்.

குதிராம் போஸை மக்கள் மெள்ள மறந்துவருவதாக மூத்த வழக்கறிஞர் எஸ்.கே. ஜா வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

குதிராம் போஸின் வழக்கு விசாரணை, தீர்ப்பின் நகல் முசாபர்பூரில் கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும், பிகாரின் பெருமை கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உறங்கிவருவதாக கவலையுடன் தெரிவிக்கிறார் எஸ்.கே. ஜா.

மிக இளம் வயதிலேயே மரணத்தைப் புன்னகையுடன் எதிர்கொண்ட குதிராம் போஸின் நினைவலைகள் இன்றும் முசாபார்பூரில் உயிருடன் உலாவிவருகின்றன. ஆனால், இந்தப் புரட்சியாளரின் தடம்பதிந்த இடங்கள் பொதுமக்களின் பார்வைக்குச் சென்று சேராமல் உள்ளது.

இந்த வரலாற்று நாயகனின் பெருமை, தியாகம் எதிர்காலச் சந்ததியினருக்குச் சென்று சேர நினைவுச் சின்னங்கள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகா ஜாலியன் வாலாபாக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.