டெல்லி: இந்தி மொழியில் பல பாடல்களை பாடி பிரபலமடைந்த பாடகர் அர்ஜித் சிங். இவரது தும் ஹி ஹோ, 'ஃபிர் பி தும்கோ சாஹுங்கா', 'உஸ்கா ஹி பனானா', 'ஏ தில் ஹை முஷ்கில்' ஆகிய பாடல்கள் வேற்று மொழி மாநிலத்திலும் ஹிட் அடித்தது. தேசிய விருது மற்றும் பல தனியார் நிறுவன விருதுகளையும் வாங்கியுள்ளார்.
அர்ஜித் இயல்பாகவே திரைப்பட நிகழ்ச்சிகளிலோ, வேறு ஊடக பேட்டிகளிலோ அதிகமாக பங்கேற்றது இல்லை. இது போன்ற காரணத்தால் அர்ஜித் ஊடகங்கள் முன் தோன்ற வெட்கப்படுகிறார் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஊடகத்திடம் பேசிய அர்ஜித் சிங், ‘ ஊடகம் ஒரு தொழிலாகும். அந்த தொழில் நான் விற்பனை பொருள் இல்லை. எனது வேலைதான்(பாடல்) விற்பனை பொருள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அர்ஜித் இந்தியா முழுவதும் பல இடங்களில் அவரது கச்சேரி நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் கூறினார், இது குறித்து பேசிய அவர், "ஒரு நேரடி கச்சேரி நிகழ்ச்சி என்பது ஒரு தேர்வு போன்றது . அதற்காக நாங்கள் தயார் செய்து செயல்படுகிறோம். இருப்பினும் நிச்சயமாக ஒரு சில தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த உணர்வு என்னை எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்க தூண்டு கோலாக உள்ளது. மேலும் இது பல்வேறு இசைக்கருவிகளை நேரலையில் வாசிப்பதற்காக என்னை தயார்படுத்துகிறது.
அடுத்த மாதம் இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் கச்சேரி நிகழ்ச்சி நடக்க உள்ளது. மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் அர்ஜித் நேரலையில் பாட உள்ளார். இந்நிகழ்ச்சிகளுக்கு பேடிஎம் (Paytm Insider )மற்றும் சுவிகி ஸ்டபின்அவுட் (Swiggy SteppinOut) ஆகியவற்றின் தயாரிப்பு கூட்டாளியான ஹைப்பர்லிங்க் பிராண்ட் சோலியசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன. நவம்பர் 26 ஆம் தேதி மும்பையிலும் அதைத் தொடர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி டெல்லியிலும், ஹைதராபாத்தில் டிசம்பர் 17 அன்றும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மேலும் அடுத்த தொடக்கத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் நிகழ்ச்சிகள் தொடங்கும்.
இதையும் படிங்க:அயோத்தியில் களைகட்டும் தீபாவளி - மணல் சிற்பத்தில் ராமயண கதைகள்