ETV Bharat / bharat

ஆப்கானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்களை மீட்க புதிய கண்காணிப்பு மையம் உருவாக்கம் - சிறப்பு ஆப்கானிஸ்தான் செல்

ஆப்கான் நாட்டை விட்டு வர விரும்பும் சீக்கியர்கள், இந்துக்களை இந்தியா அழைத்துவர 'ஆப்கானிஸ்தான் கண்காணிப்பு மையம்' என்ற ஒரு உதவிக்குழுவை உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

சிறப்பு ஆப்கானிஸ்தான் செல்
சிறப்பு ஆப்கானிஸ்தான் செல்
author img

By

Published : Aug 17, 2021, 2:44 PM IST

Updated : Aug 17, 2021, 4:10 PM IST

ஆப்கான் நாட்டை தாலிபன் அமைப்பு கைப்பற்றிய நிலையில் அந்நாட்டில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணிகளை மேற்கொள்ள 'ஆப்கானிஸ்தான் கண்காணிப்பு மையம்' என்ற குழுவை, இந்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ஆப்கானில் இருந்து வர விரும்பும் சீக்கியர்கள், இந்துக்களை தாயகம் அழைத்துவர, இந்த கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர், "ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பி வருவதற்கும், மற்ற கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவும் உள்துறை அமைச்சகம் சிறப்பு ஆப்கானிஸ்தான் கண்காணிப்பு மையம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது" எனத் தெரிவித்தார்.

தாயகம் திரும்ப உதவி எண் பகிர்வு

இந்த 'ஆப்கானிஸ்தான் கண்காணிப்பு மையத்தை' தொடர்புகொள்ளும் வகையில் தொலைபேசி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் பகிர்ந்துள்ளார்.

அதன்படி +91 9717785379 என்ற தொலைபேசி எண்ணுக்கும், MEAHelpdeskIndia@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்புகொண்டு உதவி கேட்கலாம்.

தாங்கள் ஆப்கான் சீக்கிய, இந்து சமூகப் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புபவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அழைத்துவரும் பணியை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் ஆலோசனை

Last Updated : Aug 17, 2021, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.