ETV Bharat / bharat

மூடப்பட்டதா கந்தகார் தூதரகம்... வெளியுறவுத்துறை விளக்கம் - உலக செய்திகள்

கந்தகார் தூதரகம் தற்காலிகமாகதான் காலி செய்யப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Ministry of External Affairs
Ministry of External Affairs
author img

By

Published : Jul 11, 2021, 6:34 PM IST

ஆப்கானின் முக்கிய மாகாணமாக கந்தகார் பகுதியில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா காலி செய்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இம்முடிவு எடுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த தூதரக அலுவர்கள் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் திரும்பியுள்ளனர்.

இதையடுத்து கந்தகார் தூதரகத்தை இந்திய அரசு முழுமையாக மூடத் திட்டமித்துள்ளதாக செய்திகள் பரவத் தொடங்கின. இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அங்கு நடைபெறும் உள்நாட்டு மோதல்கள் காரணமாகவே இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக மூடப்படும் என்ற செய்தி உண்மை அல்ல என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பக்சி இது குறித்து தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறியுள்ள நிலையில், அங்கு மீண்டும் தாலிபான்களின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அங்குள்ள பல பிராந்தியங்களை தாலிபான் கைப்பற்றி ஆப்கான் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெல்டா வைரஸுக்கு எதிராக 90% பாதுகாப்பு தரும் ஸ்புட்னிக் தடுப்பூசி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.