ஹைதராபாத்: இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்ட்ராநாசல் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த பரிசோதனை முடிவுகளில் இன்ட்ராநாசல் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் நோயெதிர்ப்பு சக்தி கொண்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சுதந்திர தினத்தன்று இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்த உடன் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கும். இந்த தடுப்பூசியை 2 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள் ஒரு பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் விநியோகிக்கும் உரிமையை பாரத் பயோடெக் முன்னதாகவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விளையாட்டு வீரர்கள் ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும்... பிரதமர் மோடி...