ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், 2021ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடுவதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று (டிச.30) ராஜஸ்தானில் உள்ள ரணதம்போர் தேசிய பூங்காவிற்கு தனது குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, சூர்வால் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், காரின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது.
அசாருதீன்
அசாருதீன் தொடர்ச்சியாக மூன்று உலக கோப்பைகளில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்திய சாதனைக்கு சொந்தக்காரர். இவரின் இந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. 2000ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மேட்ச் பிக்ஸிங்-இல் ஈடுபட்டார் என இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீதான தடை 2012ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.
இதையும் படிங்க:வாகனங்களில் பம்பரை நீக்க இதுதான் காரணமா?