டெல்லி மாநகராட்சியின் ஐந்து வார்டுகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.28) நடைபெற்றது. அதற்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் ஐந்தில் நான்கு இடங்களை கைப்பற்றி ஆளும் ஆம் அத்மி கட்சி அமோக வெற்றிபெற்றது.
கல்யாண்புரி, ரோஹின்-சி, திரிலோக்புரி, ஷாமிலார் பாக் வடக்கு ஆகிய வார்டுகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. சௌஹான் பங்கார் வார்டை மட்டும் காங்கிரஸ் கைப்பற்றியது. போட்டியிட்ட ஐந்து வார்டுகளிலும் எதிர்க்கட்சியான பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் ஆத்மியை வீழ்த்தி பாஜக மாநகராட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சர்: புகார் அளித்த ஆர்வலர்!