ETV Bharat / bharat

ஹுரியத் மாநாடு அமைப்பின் வாயிலில் தேசிய கொடியை ஒட்டிய காஷ்மீர் பண்டிட் - காஷ்மீர் பண்டிட் சந்தீப் மாவா

‘ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, காஷ்மீர் பண்டிட் சந்தீப் மாவா நேற்று(ஆகஸ்ட் 3) ஸ்ரீநகரின் ராஜ்பாக் பகுதியில் உள்ள அனைத்து கட்சி ஹுரியத் மாநாடு அமைப்பின் பூட்டிய வாயிலில் தேசிய கொடியை ஒட்டினார்.

Etv Bharatஹுரியத் மாநாடு அமைப்பின் வாயிலில் தேசிய கொடியை பதித்த காஷ்மீர் பண்டிட்
Etv Bharatஹுரியத் மாநாடு அமைப்பின் வாயிலில் தேசிய கொடியை பதித்த காஷ்மீர்ஹுரியத் மாநாடு அமைப்பின் வாயிலில் தேசிய கொடியை பதித்த காஷ்மீர் பண்டிட் பண்டிட்
author img

By

Published : Aug 4, 2022, 12:14 PM IST

ஸ்ரீநகர்: 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதற்கு ‘ஹர் கர் திரங்கா’ என்ற இயக்கம் எனவும் பெயரிடப்பட்டது. பலர் தங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தேசிய கொடியை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீநகரைச் சேர்ந்த சந்தீப் மாவா என்பவர் ஹுரியத் மாநாடு அமைப்பின் வாயிலில் மூவர்ண கொடியை ஒட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்த அமைப்பானது பாகிஸ்தானின் வழிகாட்டுதலில் வேலை செய்தது. பாகிஸ்தானும் ஹுரியத்தும் இணைந்து காஷ்மீர் மக்களை அழித்துவிட்டது. இந்த அமைப்பினர் சுதந்திர முழக்கத்தை விட்டுவிட்டு இப்போது போதைப்பொருள் மூலம் நமது புதிய தலைமுறையை அழிக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் இந்தியாவின் தேசியக் கொடியை பிடிக்க வேண்டும் என்பதை நாங்கள் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறோம், தற்போது ஹூரியத்தின் அலுவலகமும் இந்தியமயமாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

ஹுரியத் மாநாடு அமைப்பின் வாயிலில் தேசிய கொடியை பதித்த காஷ்மீர் பண்டிட்

மேலும் பேசுகையில், "காஷ்மீரின் வளர்ச்சியும் செழுமையும் இந்தியக் கொடியின் கீழ் மட்டுமே சாத்தியம் ஆகும். இங்குள்ள இளைஞர்கள் கடந்த 32 ஆண்டுகளாக தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர். இப்போது அவர்களை நெறிபடுத்துவதற்கான நேரம் இது, நாங்கள் நல்ல நோக்கத்துடன் கொடியை வைத்தோம். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கொடியை போலீசார் அகற்றினர்.

இந்தியக் கொடிக் குறியீட்டின்படி, இந்தியாவின் தேசியக் கொடி எப்போதும் மற்ற கொடிகளை விட உயரத்தில் ஏற்றப்பட வேண்டும். மாவா ஒட்டியிருந்த தேசிய கொடி ஹுரியத் மாநாட்டு பலகைக்கு கீழே இருந்தது. இது குறித்து இந்திய அரசியலமைப்பில் "தேசிய கொடிக்கு அருகே வேண்டுமானால் மற்ற கொடிகள் இருக்கலாமே தவிர, வேறு எந்தக் கொடியும் அதிகமாகவோ அல்லது உயரமாகவோ வைக்கப்படக்கூடாது. பூக்கள் அல்லது மாலைகள் அல்லது சின்னம் உட்பட எந்தப் பொருளும் இருக்கக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் நாடாக இந்தியா மாறும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.