ETV Bharat / bharat

மீனவர்களின் பாதுகாப்பில் அரசு கூடுதலான அக்கறை கொண்டுள்ளது - ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: இலங்கைக் கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிப்பதற்கு கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வைகோ
வைகோ
author img

By

Published : Feb 12, 2021, 2:48 PM IST

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகிவருகிறது. அதுமட்டுமின்றி, அவர்களை கைது செய்து படகுகளையும் அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்துவருகின்றனர். நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில், தமிழ்நாட்டு எம்பிக்கள் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்துவருகின்றனர்.

இலங்கைக் கடற்படைக் கப்பல் மோதித் தகர்த்த மீனவர்களின் படகில், எத்தனைப் பேர் இறந்தனர்? அதற்கு, இந்திய அரசு ஆற்றிய எதிர்வினை என்ன? கடுமையான எதிர்ப்பு தெரிவித்தீர்களா? இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தீர்களா? திட்டமிட்டு, தமிழ்நாடு மீனவர்களைப் படுகொலை செய்த அவர்களிடம் இருந்து, இழப்பு ஈட்டுத் தொகை ஏதும் கோரி இருக்கின்றீர்களா? என மாநிலங்களவையில் வைகோ அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்கையில், " 2021 ஜனவரி 18 ஆம் நாள், இலங்கைக் கடற்படைக் கப்பலுக்கும், இந்திய மீனவர்களின் மீன்பிடிப் படகுக்கும் இடையே நடந்த மோதலில், நான்கு மீனவர்கள் இறந்தனர்.

இது தொடர்பாக, நமது கடுமையான கண்டனத்தை, இலங்கையில் உள்ள இந்தியத் தூதர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். அதேபோல, டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரிடமும் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கின்றோம்.

உயிர்களை இழந்தது குறித்த நமது வேதனையைத் தெரிவித்ததுடன், மீனவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கின்றோம்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு குறித்து, அரசு ஆகக்கூடுதலான அக்கறை கொண்டுள்ளது. மீனவர்கள் யாரேனும் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் கிடைத்தால், உடனடியாக அதுகுறித்து, இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்; தூதரகங்களின் வழியாக அவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.

2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இலங்கைப் பிரதமருடன், இந்தியப் பிரதமர் அவர்கள் நடத்திய இருதரப்பு காணொலி சந்திப்பின்போது, இந்தப் பிரச்னையை எழுப்பி இருக்கின்றோம்.

2021 ஜனவரி 5,6,7 ஆகிய மூன்று நாள்கள், நான் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டபோது, இலங்கை அரசின் மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, இந்திய மீனவர்களின் பிரச்னைகள் குறித்து மிக விரிவாகப் பேசினேன்.

இரண்டுக்கு இரண்டு (2+2) என்ற அடிப்படையில், 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முன் முயற்சிகளின் விளைவாக, இரண்டு நாடுகளின் அயல் உறவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள், தில்லியில் நேரில் சந்தித்துப் பேசினர். இரு தரப்பினரும் இணைந்து செயல்படுகின்ற வகையில், ஒரு கூட்டு பணிக்குழு (Joint Working Group) அமைத்து, மீனவர்களின் பிரச்னைகளை விரிவாக அலசி ஆராய்ந்து தீர்வு காண்பது என தீர்மானிக்கப்பட்டது.

அந்தப் பணிக்குழுவின் நான்காவது கூட்டம், 2020 டிசம்பர் 30ஆம் நாள் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கடல் எல்லை குறித்த மீனவர்களின் பிரச்னைகள் குறித்துப் பேசப்பட்டது" என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இலங்கைக் கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிப்பதற்கும், பறிமுதல் செய்த படகுகளைத் திரும்பப்பெறுவதற்கும், ஆகக் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம். கடைசியாக ஒன்பது மீனவர்கள் அவர்களுடைய பிடியில் இருந்தார்கள். அவர்களை விடுவித்துவிட்டோம்.

அவர்களுடைய பிடியில், முன்பு 173 படகுகள் இருந்தன. இப்போது 62 படகுகள் உள்ளன. அவற்றுள் 36 படகுகள் விடுவிக்கப்படும். அதுகுறித்த பேச்சுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனவே, எந்த அளவிற்கு மீட்க முடியுமோ, அவற்றை மீட்போம்; எஞ்சிய படகுகளையும் விடுவிப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.