ETV Bharat / bharat

Ravindra Mahajani: பிரபல மராத்தி நடிகர் ரவீந்திர மஹாஜனி இறந்த நிலையில் மீட்பு!

பிரபல மராத்தி நடிகர் ரவீந்திர மஹாஜனி இறந்து கிடந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 15, 2023, 12:51 PM IST

புனே: பிரபல மராத்தி பத்திரிகையாளரான ஹெச்.ஆர்.மஹாஜனியின் மகன், ரவீந்திர மஹாஜனி. இவர் பெல்கமில் பிறந்தவர். ஆனால், அவரது சிறு வயதிலேயே மஹாஜனியின் குடும்பம் மும்பைக்கு குடி பெயர்ந்து உள்ளது. எனவே, அவர் தனது குழந்தைப் பருவத்தை மும்பையில் கழித்து உள்ளார். அப்போது, தனது பள்ளிப் பருவத்தில் பல்வேறு வேடங்களில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.

இருப்பினும், அவரை மூன்று வருட காலம் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிவதற்கு காலம் தள்ளி உள்ளது. ஆனால், இரவு நேரங்களில் டாக்ஸி ஓட்டி வருமானத்தை ஈட்டி வந்த மஹாஜனி, பகல் வேளையில் தனது நடிப்பு என்ற பசியைத் தீர்க்க பல்வேறு வாய்ப்புகளைத் தேடத் தொடங்கி உள்ளார்.

அப்போது, பல இயக்குநர்களிடமும் நடிகர் வாய்ப்புக்காக விண்ணப்பம் செய்து உள்ளார். இறுதியாக பிரபல மராத்தி நாடக இயக்குநர் மதுசூதன் கலேல்கரின் ‘ஜனதா அஜந்தா’ என்ற நாடகத்தின் மூலம் நடிகராக தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். இதனையடுத்து ‘ஜூன்ஜ்’ (Jhunj) என்ற மராத்திய திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக திரைப்படத்தில் அறிமுகம் ஆகி உள்ளார்.

இவரது திரைப்பயணம் 70களின் இடைப்பட்ட காலத்தில் தொடங்கி உள்ளது. இதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ள மஹாஜணிக்கு ‘தேவதா’ (Devata) என்ற திரைப்படத்தில் லகான் என்ற கதாபாத்திரம்தான் இன்றளவும் அவரை சினிமா ரசிகர்களின் மனதில் ஆழப் பதிய வைத்து உள்ளது.

மேலும், மும்பைச்சா ஃபஜுதார் (Mumbaicha Faujdaar - 1984), கலாத் நகாலட் (Kalat Nakalat - 1990), லட்சுமி, கோந்தாலத் கோந்தல் மற்றும் ஹல்டி குன்கு ஆகிய திரைப்படங்கள் இவரது நடிப்பில் இன்றளவும் பேசப்படுகின்ற திரைப்பட பட்டியலில் இடம் பெற்று உள்ளன. மேலும், தற்போதைய மராத்தி நடிகரும், இவரது மகனுமான காஷ்மீர் மஹாஜானி உடன் இணைந்து ‘பானிபட்’ (Panipat) என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதன் பிறகு அவர், புனே மாவட்டம் மாவல் தாலுகாவில் உள்ள அம்பி என்ற கிராமத்தில் இருக்கும் சொசைட்டி வீட்டில் வசித்து வந்து உள்ளார். இதனையடுத்து, அவர் வசித்து வந்த வீட்டின் கதவு திறக்கப்படாமலே இருந்து உள்ளது.

அது மட்டுமல்லாமல், ரவீந்திர மஹாஜனியின் வாடகை வீட்டில் வசித்து வரும் நபர்களுக்கு துர்நாற்றமும் வீசத் தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உள்ளே சென்று பார்த்தபோது, ரவீந்திர மஹாஜனி உயிரிழந்த நிலையில் கிடந்து உள்ளார்.

தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பின்னர், காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகர் ரவீந்திர மஹாஜனி உடை மாற்றும்போது உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்து உள்ளனர். மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், ''கிடா'' திரைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.