விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்தின் (பி.எல்.ஜி.ஏ) 20ஆவது ஆண்டு நிறைவைக் அனுசரிப்பதற்காக தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பினரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஜி. மதுகுலா மண்டல் மடி கருவை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளில், மாவோயிஸ்டுகள் பழங்குடியினருக்கு வாரம் முழுவதும் கொண்டாட்டங்களில் பங்கேற்று அதை சிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள கோயுரு காட்டில் பாதுகாப்புப் படையினரால் சீலம் நரேஷ், நல்ல ஆதி ரெட்டி மற்றும் யெர்ரமெட்டி சந்தோஷ் ரெட்டி ஆகியோர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பி.எல்.ஜி.ஏ வாரம் டிசம்பர் 2 முதல் 8ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
இதற்கிடையில், மாவோயிஸ்ட் தலைவர் ஜெம்மிலி ஹரி போலீசில் சரணடைந்த பின்னர், ஏழு மாவோயிஸ்டுகள் சி.ஐ.வெங்கடரமணாவின் கீழ் கோயுரு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மாவோயிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறுபவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்க காவல் துறை தயாராக இருப்பதாக சி.ஐ.வெங்கடரமணர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிகாரில் நான்கு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை