ஹவுரா (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள குசூரியில் இருக்கும் கஜானந்த் பஸ்தியில் விஷம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், காவல்துறை மற்றும் நிர்வாகத்திற்கு தெரியாமல் சில உடல்கள் தகனம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இங்குள்ள மாலிபஞ்சகாரா காவல் நிலையத்திற்கு பின்புறம் பிரதாப் கர்மாகர் என்ற நபர் சட்டவிரோத மதுபான கடை நடத்தி வருகிறார். இங்கு உள்ளூர் தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் தினமும் வந்து செல்வதாக கூறப்படுகிறது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் சம்பவத்தன்று மதுபான கடையில் மது அருந்தியுள்ளனர்.
மதுபானத்தை குடித்து பலர் நோய்வாய்ப்பட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் சிலர் வீட்டில் உள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விஷம் குடித்து இறந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
மேலும் சிலரின் குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் உடல்களை எரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஹவுரா கமிஷனரேட் அலுவலர்கள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: சப் - இன்ஸ்பெக்டர் மீது வேன் ஏற்றிய கடத்தல்காரர்கள் - ராஞ்சியில் பயங்கரம்!